சென்னையில் தன்னார்வலர்கள் மூலம் மேலும் 12 பேருக்கு கொரோனா..!

Breaking News

header ads

சென்னையில் தன்னார்வலர்கள் மூலம் மேலும் 12 பேருக்கு கொரோனா..!

சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் வி.ஆர் பிள்ளை தெருவில் தன்னார்வலர் மூலம் ஒரே தெருவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.

ஊரடங்கு அமல் காலத்தில் உணவு உள்ளிட்டவற்றை போலீஸ்காரர்கள் உள்ளிட்டோருக்கு அளித்து வந்த தன்னார்வலருக்கு முதலில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவரிடம் உணவு உள்ளிட்டவற்றை பெற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் 42 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் தகவல் வெளிவந்துள்ளது.

இதேபோல் சூளைமேடு காவல்நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக பணியாற்றும் அய்யப்பன் என்பவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் தொடர்பிலிருந்தோரை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments